TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் எந்தெந்த பணிகளில் சேரலாம்? கல்வித்தகுதி இதுதான்!

0
TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் எந்தெந்த பணிகளில் சேரலாம்? கல்வித்தகுதி இதுதான்!
TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் எந்தெந்த பணிகளில் சேரலாம்? கல்வித்தகுதி இதுதான்!
TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் எந்தெந்த பணிகளில் சேரலாம்? கல்வித்தகுதி இதுதான்!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வின் கீழ் உள்ள 5,831 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை (பிப்.18) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தேர்வு எழுத தேவையான தகுதிகள், வழங்கப்படும் பதவிகள் குறித்த விவரங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

குரூப் 2:

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுகளில் ஒன்றான குரூப் 2 தேர்வின் கீழ் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த குரூப் 2 தேர்வு துணை வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், Grade-II, ஜூனியர் வேலைவாய்ப்பு அலுவலர், ஜூனியர் வேலைவாய்ப்பு அலுவலர் துணைப் பதிவாளர், Grade-II தொழிலாளர் உதவி ஆய்வாளர் உதவி பிரிவு அலுவலர் , உதவிப் பிரிவு அலுவலர் TNPSC, உதவிப் பிரிவு அலுவலர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, நன்னடத்தை அதிகாரி, சமூக பாதுகாப்பு, தொழில் கூட்டுறவு அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது.

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

மேலும் நன்னடத்தை அதிகாரி, சிறைத்துறை, தொழில் கூட்டுறவு அலுவலர், தொழில் ஆணையர், பெண்கள் நல அலுவலர்,துணை ஆய்வாளர் சர்வே இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், தொழில்துறை மேற்பார்வையாளர், , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தணிக்கை ஆய்வாளர், உதவி ஜெயிலர், சிறைத்துறை,வருவாய்த் துறையில் உதவியாளர், DVAC இல் சிறப்பு உதவியாளர் கைத்தறி ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கும் இந்த குரூப் 2 தேர்வு பொருந்தும். இந்த பதவிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம்!

அதனை தொடர்ந்து கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் கணக்காளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், தலைமை செயலகத்தில் உதவியாளர் பணி, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், பொது விநியோக துறை, நேர்முக எழுத்தர், நேர்முக எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு, ஸ்டெனோ-டைப்பிஸ்ட், தமிழ்நாடு தலைமை செயலக சேவை, வருவாய் நிர்வாகம், தொழில்துறை ஆணையர், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை, நுகர்வோர் பாதுகாப்பு, நில நிர்வாகம், நில சீர்திருத்தங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தலைமை செயலக துறையில் உதவியாளர் (நிதித் துறை) ,இளநிலை உதவியாளர், திட்டமிடம் துறை ஆகிய பதவிகளுக்கு நேர்காணல் இன்றி தேர்வு செய்யப்படுவர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!