கோபியை பற்றிய உண்மைகளை ஈஸ்வரியிடம் கூறிய தாத்தா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

0
கோபியை பற்றிய உண்மைகளை ஈஸ்வரியிடம் கூறிய தாத்தா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபியை பற்றிய உண்மைகளை ஈஸ்வரியிடம் கூறிய தாத்தா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபியை பற்றிய உண்மைகளை ஈஸ்வரியிடம் கூறிய தாத்தா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

ராஜேஷ் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சண்டை போடுவதால் ஈஸ்வரிக்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. இந்நிலையில், கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் ராமமூர்த்தி தாத்தா ஈஸ்வரியிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் வரிசையாக அனைவரிடமும் கோபி மாட்டியபடி இருக்கிறார். அதாவது, குடிபோதையால் கோபி செய்த காரியத்தால் தான் கோபிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தலைகால் புரியாமல் குடித்துவிட்டு பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மையை ராதிகாவிடம் கோபியே கூறிவிடுகிறார். பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிந்ததிலிருந்து கோபியை விட்டு விலக வேண்டும் என ராதிகா முயற்சி செய்து வருகிறார். ஆனால், கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. மேலும், அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையே ராஜேஸும் அவ்வப்போது கோபியின் வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார். எதற்காக இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சண்டைபோட வேண்டும் என குடும்பத்தினர்கள் அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. இது பற்றி ராமமூர்த்தி தாத்தாவிடம் ஈஸ்வரி கேட்டபோது எதுவுமே கூறாமல் தாத்தா மறைக்கிறார். இதனால், கோபி உண்மையாகவே தவறு செய்கிறானோ என ஈஸ்வரிக்கு சந்தேகம் வருகிறது. ஏதோ ஒரு விஷயத்தை என்னிடமிருந்து மறைக்கிறீர்கள் என ஈஸ்வரி சொல்லும்படி கேட்டு கெஞ்சுகிறார்.

மதுரையில் நாளை (ஜூலை 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஆனாலும், ராமமூர்த்தி தாத்தாவும் எழிலும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். பின்னர், இதற்கு மேலும் உண்மையை மறைத்து என்ன செய்யப் போகிறோம் என அனைத்து உண்மையையும் ஈஸ்வரிடம் ராமமூர்த்தி தாத்தா கூறுகிறார். அதாவது உனது பையனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது எனக் கூறுகிறார். மேலும், ராமமூர்த்தி தாத்தா கூறியதை நம்பாமல் ஈஸ்வரி எழிலிடம் கேட்க எழிலும் ஆமாம் என்று கூறுகிறார். இந்நிலையில், பாக்கியாவின் நிலைமையை பற்றி யோசித்து ஈஸ்வரி கதறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here