தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – பெறுவது எப்படி?

0
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை - பெறுவது எப்படி?
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை - பெறுவது எப்படி?
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – பெறுவது எப்படி?

தமிழகத்தில் 10 வகுப்பு முதல் டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவருக்கும் தமிழக அரசு ரூ.1000 வரை உதவித்தொகை வழங்குகிறது.

அரசு உதவித்தொகை:

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. தமிழக அரசை பொறுத்தவரையில் படித்தவர்கள், படிக்காதவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் வெவ்வேறு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருகிறது. படிக்கின்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் உதவித்தொகை வழங்குகிறது. படிக்காத 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஓஏபி என்பதன் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் படித்த மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்குகிறது. இவ்வாறாக ஆண்டு தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!

இதனை 10 வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் உட்பட டிகிரி முடித்தவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதற்கு விண்ணப்பிப்பதற்கு பல்வேறு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, employment renewal 5 வருடங்கள் முடிவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயது நிறைந்தவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற மற்ற பிரிவினருக்கு 48 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72 ஆயிரம் வரை மட்டுமே இருத்தல் வேண்டும். மேலும் முக்கியமான தகுதி விண்ணப்பதாரர் தனியார் மற்றும் பிற அரசுசாரா நிறுவனங்கள் என எவ்வித வேலையும் பார்க்க கூடாது. உதவித்தொகையானது 10 ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.100, 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, எந்த டிகிரி முடித்திருந்தாலும் ரூ.400 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600 முதல் 1000 வரை வழங்கப்படும்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஜீரோ கவுன்சிலிங்! அமைச்சர் அறிவிப்பு!

இத்தகைய உதவித்தொகையானது மாதம் தோறும் முதல் 15 தேதிகளில் விண்ணப்பதாரரின் வாங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.30-ம் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அம்மாவட்ட ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!