தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு – சூப்பரான அறிவிப்பு!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - சூப்பரான அறிவிப்பு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - சூப்பரான அறிவிப்பு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு – சூப்பரான அறிவிப்பு!

தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கவுள்ளது. இதற்கு விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் படிப்பு முடிந்தவுடன் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சூப்பரான அறிவிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் ‘தாட்கோ, HCL நிறுவனம் இணைந்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் இணைய வழி மூலம் பயிற்சி வழங்கப்படும். இதற்கு தேவையான மடிக்கணினியை HCL நிறுவனமே வழங்கும்.

Exams Daily Mobile App Download

பின்னர், சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். இதன்போது, ஊக்கத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். மேலும் இரண்டாம் ஆண்டில் HCL நிறுவனத்தில் திறமைக்கு ஏற்ப லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கூடவே இந்தியாவின் மதிப்புமிக்க பிட்ஸ் பிளானி, சாஸ்தரா, அமிட்டி பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு படிக்க வசதி செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமாகிய தாட்கோவே கடனாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரா, உபி.யில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் அந்நிறுவன வேலை வாய்ப்புடன், 3 வருட பிசிஏ பட்டப்படிப்பு படிக்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? அமைச்சர் விளக்கம்

இதற்கு 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில், தாட்கோவின் பங்களிப்பாக HCL நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 லட்சம் கட்டணத்தை தாட்கோ கல்வி கடனாக வழங்கும். இத்திட்டம் 2020-21, 2021-22 கல்வியாண்டில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியருக்காக மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த இணையதள பக்கத்திற்குச் சென்று http://iei.tahdco.com/register.php விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!