GPay, Phonepe, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு – நெட் வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை!

0
GPay, Phonepe, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு - நெட் வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை!
GPay, Phonepe, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு - நெட் வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை!
GPay, Phonepe, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு – நெட் வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை!

சமீப காலமாக மக்கள் பலர் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு இன்டர்நெட் வசதி அவசியமாகிறது. ஆனால் நெட் வசதி இல்லாமல் பணபரிவர்த்தனைகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பணப்பரிவர்த்தனை செயலிகள்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதனால் ஆன்லைன் மூலமாக பொருள்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மளிகை பொருள்கள் முதல் மீன் காய்கறிகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாக வாங்கப்பட்டது. மேலும் அதற்கான பண பரிவர்த்தனைகளும் கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டம் – பிரதமர் மோடி தொடக்கம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் இப்போது சிறிய இளநீர் கடை, டீ கடை முதல், பெரிய வணிக வளாகங்கள் வரை இந்த செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய இன்டர்நெட் வசதி அவசியமாகும். அப்படி இல்லையென்றால் உங்களால் Google Pay, PhonePe, Paytm, Airtel Payments Bank, Amazon Pay மற்றும் பல தளங்களில பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாமல் பண பரிவர்த்தனைகைளை மேற்கொள்ள முடியும்.

UPI மூலம் பணம் அனுப்பும் எளிய வழிமுறைகள்:

உங்களது மொபைலில் நீங்கள் UPI கணக்கை உருவாக்கவில்லை என்றாலும் பணத்தை அனுப்ப முடியும். அதற்கு முதலில் நீங்கள் BHIM பயன்பாட்டில் உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு சரியான தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து உங்களது மொபைலில் ‘*99#’ என்ற எண்ணிற்கு கால் செய்யவும். பின்னர் பணம், அனுப்புதல், பணம் பெறுவதற்கு, போலன்ஸ் தொகை எவ்வளவு என சரிபார்க்க, சுயவிபரம் ,நிலுவையில் உள்ள கோரிக்கைகள், பண வரித்தனைகள் மற்றும் UPI PIN கொண்ட ஏழு விருப்பங்களை கொண்ட மெனுவிற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

நீங்கள் பணம் அனுப்ப வேண்டும் என்றால், 1 என எண்ணினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறை உங்களது UPI ID, வங்கி கணக்கு மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு அல்லது தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கிறது. எனவே உங்களுக்கு என்ன முறையை மேற்கொள்ள வேண்டுமோ? அந்த முறையை தேர்வு செய்து கொள்ளவும்.

இதனையடுத்து நீங்கள் UPI ஐ தேர்வு செய்தால், யாருக்கு பணம் அனுப்ப போகிறோமோ? அவர்களது UPI ID யை உள்ளிட வேண்டும். இந்த முறையில் நீங்கள் வங்கிக்கணக்கைத் தேர்வு செய்தாலும் மற்றும் தொலைப்பேசி எண்ணை பயன்படுத்தி பணம் அனுப்ப வேண்டும் என்றால் பயனாளியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை உள்ளிட வேண்டும்

இதன்பின்னர் Google Pay, PhonePe, Paytm, Airtel Payments Bank, Amazon Pay போன்ற எந்த டிஜிட்டல் பரிவர்த்தனை தளத்தைப் போலவே நீங்கள் எவ்வளவு தொகை பரிமாற்றம் செய்ய இருக்கிறீர்களோ? அந்த தொகையை உள்ளீடு செய்து கொள்ள வேண்டும்.

இறுதியாக உங்களது UPI பின் எண்ணை உள்ளிடூ செய்ய வேண்டும். இதனையடுத்து உங்களது டிஜிட்டல் பணவர்த்தனையை முடிப்பதற்கு “send”( அனுப்பு) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது எந்த இணைய வசதியும் இல்லாமல் பரிவர்த்தனை முடிந்துவிட்டது. இந்த சேவையையை நீங்கள் பயன்படுத்துவதற்கு 50 பைசா அளவிலேயே செலவாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!