அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. அரசிடம் கோரிக்கை – போராட்டம் அறிவிப்பு!
இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (சிஐடியு) இணைந்த மதிய உணவுப் பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊதிய உயர்வு
கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (சிஐடியு) இணைந்த மதிய உணவுப் பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை. அதன் பின் அரசு அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மனுவை பெற்றுக் கொண்டார். அதன் பின் அமைச்சர் கால அவகாசம் கேட்டு அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழகத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.75க்கு விற்பனை – அதிர்ச்சியில் மக்கள்!
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், நவம்பர் 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்க இருந்தோம். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் கோரிக்கையை ஏற்று, அதை ரத்து செய்துள்ளோம். இந்த கட்டண உயர்வுக்கு அமலுக்கு வந்தால் ஆண்டுக்கு ₹170 கோடி கூடுதலாக தேவைப்படும். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றத் தவறினால், எங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.