அரசு பள்ளிகள் CBSE க்கு தரத்திற்கு மாற்றம் – அமைச்சரின் முக்கிய கோரிக்கை!

0
அரசு பள்ளிகள் CBSE க்கு தரத்திற்கு மாற்றம் - அமைச்சரின் முக்கிய கோரிக்கை!
அரசு பள்ளிகள் CBSE க்கு தரத்திற்கு மாற்றம் - அமைச்சரின் முக்கிய கோரிக்கை!
அரசு பள்ளிகள் CBSE க்கு தரத்திற்கு மாற்றம் – அமைச்சரின் முக்கிய கோரிக்கை!

புதுவையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை கல்வி அமைச்சர் முக்கிய கோரிக்கையை மத்திய மந்திரியிடம் விடுத்துள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகள்

இந்தியாவில் கடந்த 1968-ம் ஆண்டு முதன் முதலில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தம் செய்யப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டு முற்றிலும் மாற்றப்பட்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய கல்வி அமைச்சகமும் ஒப்புதல் அளித்த நிலையில் நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் சில மாநிலங்கள் இக்கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு!

பெரும்பாலும் இந்தியாவில் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலே நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாநில கல்வி கொள்கையின் படி படித்து மத்திய நுழைவு தேர்வை எழுதும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் பல மாநிலங்களில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை புகுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் யூனியன் பிரதேசமான புதுவையில் கல்வித்துறை அமைச்சர் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exams Daily Mobile App Downloadhttps://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

இது குறித்து அவர் அளித்த மனுவில் புதுவையில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு தனியாக கல்வி வாரியம் கிடையாது. அதனால் தமிழகம் மற்றும் ஆந்திர பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு அமல்படுத்த அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!