தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை கிடைக்கும் – இந்த திட்டம் பற்றி தெரியாம இருக்காதீங்க!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை கிடைக்கும் - இந்த திட்டம் பற்றி தெரியாம இருக்காதீங்க!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை கிடைக்கும் - இந்த திட்டம் பற்றி தெரியாம இருக்காதீங்க!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை கிடைக்கும் – இந்த திட்டம் பற்றி தெரியாம இருக்காதீங்க!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன. இதில், தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை கிடைக்கும் திட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.

அரசு பள்ளி மாணவர்:

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி மற்றும் பிற கல்வி சார்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மாணவர்களுக்கு மத்தியில் பெரும்பாலான அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது சாலை விபத்தில் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர அரசு சார்பாக ரூ.75000 வரை கிடைக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

உஷார் மக்களே..பிப்.10ம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் இங்கே!!

மேலும் இந்த உதவித்தொகை அந்த மாணவரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதே போன்று, அரசு பள்ளி மாணவர் விபத்தில் இறந்து விட்டால், அவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வரை அரசு சார்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!