தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை – அரசாணை வெளியீடு!

0
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - அரசாணை வெளியீடு!
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - அரசாணை வெளியீடு!
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இரு மடங்காக உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு வேலை அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பல சலுகைகளை வழங்கிய வண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்களது ஒரே கோரிக்கை அரசு வேலை தர வேண்டும் என்பது தான். அந்த வகையில் தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3.31 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது. மேலும் மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூ.20 லட்சம் மானியமாக உயர்த்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய பயிற்சி – அமைச்சர் அறிவிப்பு!

அதன் படி தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம் தினப்படி, சீருடை படி ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தேசிய அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி வந்த நிலையில், தற்போது மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!