இந்தியாவில் தனியார் ரயில் திட்டம் அமல் – கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அனுமதி!

0
இந்தியாவில் தனியார் ரயில் திட்டம் அமல் - கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அனுமதி!
இந்தியாவில் தனியார் ரயில் திட்டம் அமல் - கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அனுமதி!
இந்தியாவில் தனியார் ரயில் திட்டம் அமல் – கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அனுமதி!

இந்தியாவில் சிறந்த துறையாக ரயில்வே துறை இருந்து வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் தனியாருக்கு 150 ரயில்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இருக்கிறது. அதே போல அந்த ரயில்களுக்கான கட்டணத்தையும் தனியார் நிறுவனமே நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தனியார் ரயில்கள் இயக்கம்

இந்திய மக்கள் பலரும் சிறந்த பொது போக்குவரத்தாக ரயில்களை தான் கருதுகின்றனர். அந்த வகையில் மக்களுக்கு ஏற்ற வகையில் ரயில்வே நிறுவனமும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. தற்போது வரை இந்த துறை மத்திய அரசின் கீழ் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தனியார் நிறுவனங்களும் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என்பது போன்ற தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது.

முக்கிய நகரங்களில் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களில் ஒரு சிலவற்றை தனியாருக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், மத்திய அமைச்சகம் தனியாருக்கு ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கி ஒப்பந்தமும் வெளியிட்டது. மத்திய அரசு தேர்வு செய்து வழங்கும் இடங்களில் தனியார் ரயில்கள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முதல் கட்டமாக 150 ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – முழு விபரம் இதோ!

இந்த திட்டம் எப்படி செயலாற்றபடுகிறது என்பதனை பொறுத்து தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 இடங்களில் இயக்கப்பட இருக்கும் ரயில்களுக்கு அந்தந்த தனியார் நிறுவனங்களே டிக்கெட் கட்டணத்தையும் நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது. தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட இருக்கும் இந்த ரயில்களில் மொத்தமாக 16 பெட்டிகள் வரை இருக்கலாம் என்று ரயில்வே துறையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே துறையின் மேம்பாட்டிற்காகவும், தனியார் துறையின் நலனுக்காகவும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!