தமிழகத்தில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் வேண்டும் என தேனி மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கென்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் “புதுமைப்பெண்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கோபி & ராதிகா திருமணத்தை தடுத்து நிறுத்தும் பாக்கியா? ‘பாக்கியலட்சுமி சீரியல்’ அதிரடி ட்விஸ்ட்!

இதுபோன்ற பல்வேறு வகையான அரசின் நலத்திட்டங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதனால் தேனி மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையில், அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். அதாவது அரசின் நலத்திட்டங்கள் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருவதால் அவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதாவது சீருடை, சைக்கிள், மடிக்கணினி, செருப்பு உள்ளிட்ட 14 வகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு, காலை சிற்றுண்டி உள்ளிட்டவை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் அரசு பள்ளி மாணவர்கள் IIT, IIS, அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயின்றால் அவர்களுக்கான கல்வி செலவு அரசால் ஏற்று கொள்ளப்படுகிறது. இதே போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!