தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு வழங்கும் உதவித்தொகை!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு வழங்கும் உதவித்தொகை!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு வழங்கும் உதவித்தொகை!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு வழங்கும் உதவித்தொகை!

தமிழகத்தில் அரசு சார்பாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கல்வி தகுதிகளை பொறுத்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலைவாய்ப்பற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:

தமிழகத்தில் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறை பதிவு செய்த பிறகு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தல் அவசியம். ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் கூட சென்று மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யலாம் மேலும் புதுப்பிப்பும் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் தமது கல்வித் தகுதியை பதிவு செய்வதும் அவசியமாகும். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலையிழந்து சிரமப்பட்டனர்.

IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – Reliance Jio சூப்பர் கிரிக்கெட் ரீசார்ஜ் பிளான்ஸ்! முழு விவரம்!

இவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பாக உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்கள் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் ஆவார்கள். மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் பட்டியலின மக்களுக்கு 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், மற்ற பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் மற்றும் பெறாதோர், பிளஸ் – 2, பட்டப்படிப்பு படித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ள வேலை வாய்ப்பற்றோர், சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில், உரிய விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதிமொழியுடன் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!