தமிழகத்தில் நலிவடைந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம் – அரசின் சூப்பர் திட்டம்!

0
தமிழகத்தில் நலிவடைந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம் - அரசின் சூப்பர் திட்டம்!
தமிழகத்தில் நலிவடைந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம் - அரசின் சூப்பர் திட்டம்!
தமிழகத்தில் நலிவடைந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம் – அரசின் சூப்பர் திட்டம்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து விட்டது. இந்த நிறுவனங்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மானியம்

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நடந்து வந்த பல்வேறு வகையான தொழில்களும் சரிவை சந்தித்தது. இதனால் நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது. தொடர் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்தது. இந்நிலையில், கொரோனா காலத்தில் நலிவடைந்த தொழில் நிறுவனங்களின் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் மீண்டும் தொழிலை அதிகரிக்கும் நோக்கில் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட கவுன்சிலிங் திட்டம் – உயர்நீதிமன்றம் பாராட்டு!

இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் வகையில், அரசு தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக நலிவடைந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக கொரோனா நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதியதாக அரசு கேர் -1, கேர் -2 என்ற இரண்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதிலும்,கேர்-1 என்கின்ற முதலாவது திட்டத்தில், கொரோனா தொற்றின் தீவிர பரவல் காலமாக இருந்த இரண்டு ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாமாக அல்லது தனது வாரிசுகளின் மூலம் தங்களது பழைய வணிகத்தை அல்லது புதிய தொழிலை தொடங்குவதற்கான வங்கி கடனை வழங்க அரசு முன் வந்துள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

குறிப்பாக, இந்த கடன் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதில், அதிகபட்சமாக ரூ.5 கோடி திட்ட மதிப்பீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலீட்டில் 25 சதவீதம் அல்லது 25 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். 2ம் வகை திட்டத்தில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம் செய்வதற்காக குறிப்பிட்ட சதவீதம் மானியம் வழங்கப்படும். இவற்றை பெறுவதற்கான முழு விவரங்களும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here