தமிழக அமைச்சர்களின் பணிகள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியீடு!!

0
தமிழக அமைச்சர்களின் பணிகள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியீடு!!
தமிழக அமைச்சர்களின் பணிகள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியீடு!!
தமிழக அமைச்சர்களின் பணிகள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியீடு!!

தமிழகத்தின் முதல்வர் உட்பட 34 அமைச்சர்களுக்கான அலுவலக பணிகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் அனைவரும் தங்களின் பணியினை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2ம் தேதி நடைபெற்றது.திமுக 159 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மையான கட்சியாக வெற்றி பெற்றது. இதனால் திமுக தலைவர் இன்று முக ஸ்டாலின் இன்று தமிழக கவர்னர் முன்னிலையில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 அமைச்சர்களும் அவரைத் தொடர்ந்து பதவி ஏற்றனர்.

அதிகரித்து கொண்டே வரும் ஆன்லைன் பண மோசடி – SBI எச்சரிக்கை!!

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு துறைகளின் பெயர்களை மாற்றியமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழக அமைச்சர்களின் பணிகள் குறித்து விரிவான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி மற்ற அகில இந்திய பணிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சிகள், சிறப்பு திட்ட செயலாக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் போன்ற பணிகளை மேற்கொள்வார்.

TN Job “FB  Group” Join Now

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், சிறுபாசனம், பாசனத் திட்டங்கள், சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் போன்ற பணிகளையும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற துறைகளின் பணிகளை மேற்கொள்வார்கள். இது போல், அனைத்து தமிழக அமைச்சர்களின் அலுவலக பணிகள் குறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here