தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் பெற்றுக்கொண்ட சுமார் ரூ.2,576 கோடி அளவிலான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடன் தள்ளுபடி

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 31.03.2021 நிலவரப்படி கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன் தொகையில், நிலுவையில் இருக்கும் சுமார் ரூ.2,756 கோடி கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எழிலை ஒதுக்கும் அமிர்தா, கோபி அலுவலகத்தில் உதவி செய்வதாக சொன்ன ராதிகா – இன்றைய எபிசோட்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வேளாண்மை நபார்டு ஆகியவற்றில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்றுக்கொண்ட கடன்களின் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் மீதமிருக்கும் ரூ.2,755.89 கோடி நிலுவைத் தொகையை அரசு ஏற்றுக் கொண்டு அவற்றை தள்ளுபடி செய்கிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய வழிகாட்டுதல்களும் அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்போது

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட கடன்களில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த அசல், வட்டி தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  • அதே போல 31.03.2021 அடிப்படையில், கடன் தொகையின் நிலுவை நாள் முதல் அரசாணை வெளியிடப்படும் நாள் வரையும், பகுதியாக செலுத்தப்பட்ட கடன் தொகை போக மீதமிருக்கும் தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.
  • இந்த கடன் தொகை மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்தால், அந்த மானியம் தவிர மீதமுள்ள தொகை தள்ளுபடி செய்யப்படும்.
  • இந்த சலுகையை பெற்றுக்கொள்ள பயனர்களின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
  • அந்த வகையில் ஆதார் எண், பான், KYC, ரேஷன் அட்டைகள் முறையாக இல்லாத போலியான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது.
  • தொடர்ந்து 31.03.2021 நிலவரப்படி, கடன் நிலுவையில் இருந்து அரசாணை வெளியிடப்படும் நாள் அல்லது அதற்கு முன்னர் கடன் தொகையை முழுவதுமாக செலுத்தி இருப்பவர்கள் இத்திட்டத்தை பெற முடியாது.
  • மேலும் கடன் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெயர்கள் கட்டாயமாக வெளியிடப்பட வேண்டும்.
  • கடன்களுக்கு பங்குத் தொகை செலுத்தியிருந்தால் தள்ளுபடி செய்யப்படும் போது பங்குத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது.
  • ஆதார் அட்டையில் தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களின் முகவரி இருப்பின் அவைகள் செல்லுபடியாகாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here