ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்!

0
ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை - விரைவில் விண்ணப்பியுங்கள்!
ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை - விரைவில் விண்ணப்பியுங்கள்!
ரூ.60,000/- சம்பளத்தில் அரசு வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்!

அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. Hospital Quality Manager பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் நாளை (04.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள்:

அரசு ராஜாஜி மருத்துவமனை தற்போது வெளியிட்ட அறிவிப்பில், Hospital Quality Manager பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு (01) பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Hospital Quality Manager பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / Dental / Ayush / Paramedical பாடப்பிரிவில் Degree அல்லது Health Administration / Health Management / Public Health பாடப்பிரிவில் Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.60,000/- ஊதியமாக பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டு கால முன் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hospital Quality Manager பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Hospital Quality Manager பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (04.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!