தமிழக அரசின் நில அளவைப் பயிற்சி, விண்ணப்பங்கள் வரவேற்பு – வயது வரம்பு & முழு விபரங்கள் இதோ!

0
தமிழக அரசின் நில அளவைப் பயிற்சி, விண்ணப்பங்கள் வரவேற்பு - வயது வரம்பு & முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசின் நில அளவைப் பயிற்சி, விண்ணப்பங்கள் வரவேற்பு - வயது வரம்பு & முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசின் நில அளவைப் பயிற்சி, விண்ணப்பங்கள் வரவேற்பு – வயது வரம்பு & முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் அரசு நில அளவை பணிக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நில அளவைப் பயிற்சி:

தமிழகத்தில் பண்டைய காலத்தில் நில அளவை என்பது குழி, வேலி, மா, ஏக்கர் என்று பேச்சு வலக்கில் மட்டுமே இருந்து வந்தது. பின்னர் நில வரி வசூலிக்கும் விதமாக நிலங்களை அளக்க முடிவு செய்யப்பட்டன. மேலும் பழைய அளவை முறைகளில் ஈடுபாடு இல்லாத காரணத்தால் அதனை மாற்ற எண்ணி நில அளவை முறைகள் கொண்டு வரப்பட்டன. அதோடு மட்டுமல்லாமல் நில அளவைக்கு என்று பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதனால் முதன்முதலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவ்வாறாக இன்று வரை அந்த பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஆனது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த பயிற்சி அரசால் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி 3 மாதங்கள் நடைபெறும்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஷபானா – ‘செம்பருத்தி’ சீரியல் பிரபலமான கதை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்த பயிற்சி காலம் முடிவடைந்ததற்கு பின்னர் நில அளவைக்கான உரிமம் வழங்கப்படும். தற்போது நில அளவைக்கான உரிமம் பெற நடத்தப்படும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை இயக்குநரகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிப்போருக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள நில அளவை பயிற்சி நிலையத்தில் 100 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நில அளவைப் பயிற்சி மையத்தில் 50 பேருக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெறுவதற்கான கல்வி கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை!

இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டட பொறியியல் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி பெறுவோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது. மேலும் இந்த பயிற்சி பெற விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு அக்டோபர் 1ம் தேதிப்படி 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை முதல்வர் – இணை இயக்குநர் (பயிற்சி), நில அளவைப் பயிற்சி நிலையம், ஒரத்தநாடு – 614625, தஞ்சாவூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!