தமிழகத்தில் கருணை அடிப்படையில் அரசு பணிகள் – நியமனம் செய்யப்படும் வழிமுறைகள்!

0
தமிழகத்தில் கருணை அடிப்படையில் அரசு பணிகள் - நியமனம் செய்யப்படும் வழிமுறைகள்!
தமிழகத்தில் கருணை அடிப்படையில் அரசு பணிகள் - நியமனம் செய்யப்படும் வழிமுறைகள்!
தமிழகத்தில் கருணை அடிப்படையில் அரசு பணிகள் – நியமனம் செய்யப்படும் வழிமுறைகள்!

தமிழகத்தில் சில தரப்பு மக்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எந்த அடிப்படையில், யாருக்கு அரசு பணிகள் வழங்கப்படுகிறது என்பதற்கான முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அரசு பணிகள்:

தமிழகத்தில் பல அனைத்து தரப்பு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அரசு பணிகளில் சேர்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சில தரப்பினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணியில் பணிபுரியும் ஊழியர்கள் எவரேனும் உயிர் இழந்தால் அவர்களது குடும்பங்களுக்கு தகுதி அடிப்படையில் கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்படுவது வழக்கம். தற்போது கருணை அடிப்படையில் அரசு பணிகள் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.

கருணை அடிப்படையில் பணி நியமனம்:

  • இறந்த அரசு ஊழியர்களின் மனைவி/கணவர்/மகன்/மகள். விவாகரத்து பெற்ற மகள்/கணவனால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
  • அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் குடும்பத்தினர் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கருணை அடிப்படையில் தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/வரைவாளர்/கிடங்கு மேலாளர் தரம் – 3 மற்றும் தாலமி செயலக உதவியாளர் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • இறந்த ஊழியரின் வாரிசு தாரர் B.E பட்டம் பெற்றிருந்தால் அவருக்கு உதவி பதவியாளர் பணி வழங்க இயலாது. ஆனால் இளநிலை உதவியாளர் பதவி கிடைக்கும்.

கொரோனா பணியில் உயிரிழந்துள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

  • மேலும் இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறுமை நிலையில் இருக்கிறது என்று வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்று அதை நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் மட்டுமே பணி வழங்க இயலும்.
  • இந்த பணிக்கு இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கருணை அடிப்படையில் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், வாரிசுதாரரின் விண்ணப்ப கடிதம், இறந்த அரசு ஊழியரின் இறப்பு சான்று, வாரிசு சான்று, இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மை சான்று, கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி சான்றிதழின் மெய்தன்மை கடிதம், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்று, இறந்த ஊழியரின் மனைவி பணி நியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

  • இறந்த அரசு ஊழியரின் மனைவி/கணவர் பணி நியமனத்திற்கு கோரினால் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகன்/மகள் பணிநியமனம் கோரினால் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.
  • மேலும் கருணை அடிப்படையில் அரசு பணிகளில் சேர்வதற்கு குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
  • மேலும் திருமணமாகாத இறந்த அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ இயலாமை காரணமாக அரசு பணியில் இருந்து பணியாளர் ஓய்வு பெற்றால், அவரது வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும். ஆனால் அவர்கள் பணி நியமனம் கோருவதற்கான சான்று, அரசு ஊழியர் மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெற்றுள்ளார் என்பதற்கான மருத்துவர் சான்று(அசல்), மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணி பதிவேட்டின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!