தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – 174 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை - 174 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை - 174 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – 174 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் சுமார் 174 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மருத்துவ வாரியம் இதற்கான விண்ணப்பங்களை தற்போது வரவேற்றுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்புகள்

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில் பல்வேறு வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) காலியாக இருக்கும் களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன் படி 12ம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கான வேலைவாய்ப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்களும் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி 02.02.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறைகளை குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.

பதவி – களப்பணியாளர் (Field Assistant)

காலியிடங்கள் – 174

கல்வித்தகுதி:

12 ஆம் வகுப்பில் தேர்ச்சியுடன் Medical Laboratory Technology படிப்பு அவசியம்.

சம்பளம்:

ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

  • இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • தவிர ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு 59 வயது வரை தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை:

  • 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, CMLT சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • அந்த வகையில் 10 ஆம் வகுப்புக்கு 20%மும், 12 ஆம் வகுப்புக்கு 30%மும், CMLT சான்றிதழ் படிப்புக்கு 50%க்கும் கணக்கிடப்படும்.
  • எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்ப முறை:

http://mrbonline.in/ என்ற இணையதளப்பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ.600 மற்றும் SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ.300 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: 02.02.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!