ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனைகளுக்கு அரசு வேலை!

0
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனைகளுக்கு அரசு வேலை!
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனைகளுக்கு அரசு வேலை!
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனைகளுக்கு அரசு வேலை!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் சுபா, தனலட்சுமி ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு பணி வழங்க உள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ல் தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அச்சத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சுபா, தனலெட்சுமி உட்பட மேலும் 5 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்புத்தொடர் ஓட்ட பிரிவில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மாதம் ரூ.10 ஆயிரம் வரை பென்சன் – LIC நிறுவனத்தின் வாழ்நாள் ஜீவன் சாந்தி பாலிசி!

205 நாடுகளில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து 120 வீரர், வீராங்கனைகள் 18 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் இருந்து 27 விளையாட்டு வீரர்கள் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக தடகள போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் பின்தங்கிய கிராமப்புறங்களில் இருந்தும் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதில் திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா வெங்கடேஷன், மதுரை சக்திமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி ஆகிய மூன்று பெண்களும் ஒலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்தப் போகிறார்கள். இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா, தனலெட்சுமிக்கு அரசுப் பணி வழங்கப்படும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here