தமிழக கோவில்களுக்கு செல்லும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடு – அரசின் தகவல்!

0
தமிழக கோவில்களுக்கு செல்லும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடு - அரசின் தகவல்!
தமிழக கோவில்களுக்கு செல்லும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடு - அரசின் தகவல்!
தமிழக கோவில்களுக்கு செல்லும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடு – அரசின் தகவல்!

தமிழகத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பெரியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக தரிசனம் செய்வதற்காக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு விடுத்துள்ளது.

சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள்

கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெருந்தொற்று உலக மக்களை உலுக்கி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்களுக்கு, விளையாட்டு மைதானங்களுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், கோவில் வழிபாட்டு தலங்களுக்கு, சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கொரோனா குறைந்த நிலையில் மட்டுமே ஒவ்வொரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயில்களில் மக்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்யவும் வரவேற்கப்பட்டது. மேலும், 48 சிறப்பு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பெரியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இவர்கள் சுலபமாக தரிசனம் செய்வதற்கு வசதியாக திருக்கோயில் வளாகத்தில் மரத்தினாலான சாய்வு தளங்கள் மற்றும் 5 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். மேலும், தேவையான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் முதுநிலை திருக்கோயில்களில் செயல் அலுவலர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பள்ளி மாணவர்களின் கல்வி கொள்கையில் மாற்றம்? தமிழக அரசின் முடிவு!

குறிப்புகள்:

1. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தினை பக்தர்கள் அனைவரும் எளிதில் தெரிந்திருக்கும் வகையில் அறிவிப்பு செய்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

2. திருக்கோயில் நுழைவு வாயில் பக்கத்தில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோவில் ஊழியர்களுக்கு அமைச்சர் கேட்டு கொள்கிறார்.

3. திருக்கோயில்களில் இதற்காக தனியாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

4. சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையால் செய்யப்பட்ட சாய்வு தளங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!