அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜூலை 18 முதல் கோடை விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!

0
அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜூலை 18 முதல் கோடை விடுமுறை - அரசு முக்கிய அறிவிப்பு!
அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜூலை 18 முதல் கோடை விடுமுறை - அரசு முக்கிய அறிவிப்பு!
அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜூலை 18 முதல் கோடை விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட நாட்காட்டியின் படி, ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை துவங்கும் தேதிகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை:

வரும் ஜூலை மாதம் 14ம் தேதியன்று முடிவடைய இருக்கும் 2021-22ம் கல்வியாண்டின் இறுதி பள்ளி காலண்டர் மற்றும் ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில் கல்வியாளர்கள் தாங்கள் திட்டமிட்ட விடுமுறை நாட்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று UAE அரசாங்கத்தின் கல்வி அதிகாரி தற்போது தெளிவுபடுத்தி இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து பொதுக் கல்விக்கான மாநில அமைச்சரும், எமிரேட்ஸ் பள்ளிகள் ஸ்தாபனத்தின் (ESE) தலைவருமான சாரா அல் அமிரி கூறுகையில், ‘ESE கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் நடப்பு கல்வியாண்டு காலண்டருக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் கல்வியாண்டு முடிவடையும் தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு வரும் ஜூலை மாதம் 14ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!

இதற்கிடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புதிய வாராந்திர விடுமுறை முறை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நாட்காட்டியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வழக்கம் போல பள்ளிகளுக்கான வேலை நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இருக்கும். மேலும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை ஜூலை 18 திங்கட்கிழமை முதல் தொடங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!