அரசு வீடுகளுக்கான மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு – பட்ஜெட் தாக்கல்!
தமிழகத்தில் வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும் என 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்து உள்ளார்.
தமிழக அரசு பட்ஜெட்:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் நிதிநிலை அறிக்கை இன்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார்.
TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!
அதில் அரசின் வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய அம்சங்களான,
- கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் நபர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் வீடு கட்டி தரப்படும்.
- வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்த்தப்படும்.
- கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 2021-22 ஆண்டில் ரூ.8017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
- 79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
- கிராமங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2024 மார்ச்சுக்குள் 83.92 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
- ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.