தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு இன்று (செப்.07) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!

0
தமிழகத்தின் 'இந்த' மாவட்டத்திற்கு நாளை (செப்.07) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - காரணம் இதோ!
தமிழகத்தின் 'இந்த' மாவட்டத்திற்கு நாளை (செப்.07) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - காரணம் இதோ!
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு இன்று (செப்.07) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் மாரியம்மன் கோவிலானது 400 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தது. இக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது. அத்துடன் இக்கோவிலானது 400 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தாக விளங்குகிறது. இக்கோவிலில் நாளை குடமுழுக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பாலாலய பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து இக்கோவிலில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது கோவிலில் கோபுர உச்சியில் உள்ள சிலைகள், உள்பிரகாரங்கள் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா தடுப்பூசி அறிமுகம் – மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!

இதையடுத்து குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்புள்ள பகுதியில் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள், மேளதாள இசைகள் முழங்க வர்ணம் பூசப்பட்டு மாவிலைகள் இணைக்கப்பட்ட முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நத்தம் மாரியம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) காலை 11 முதல் 12 மணிக்குள் நடைபெற உள்ளது. அதனால் இத்தினத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதையடுத்து இந்த குடமுழுக்கு விழாவில் உள்ளூரில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற அக்டோபர் 1ம் தேதி அன்று வேலை நாளாக நடத்தப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here