TNPSC 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 18 கடைசி நாள்!

0
TNPSC 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூன் 18 கடைசி நாள்!
TNPSC 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜூன் 18 கடைசி நாள்!
TNPSC 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 18 கடைசி நாள்!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-III பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் மற்றும் இந்து சமயத்தை பின்பற்றும் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செயல் அலுவலர் பதவி

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் பதவிக்கான (Executive Officer, Grade-IV included in Group-VIII Services) ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 36 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இரண்டாம் நிலைப் பள்ளி இறுதித் தேர்வு (எஸ்எஸ்எல்சி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ‘தமிழ் புலவர்’ எனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதை அடுத்து மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து, 01.07.2022 அன்று, விண்ணப்பதாரர் வயது 25க்கு கீழ் இருக்கக் கூடாது. மேலும் 42 வயது நிறைவடையாமல் இருக்கும் ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 39 வயது நிறைவடையாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 37 வயது நிறைவடையாமல் இருக்கும் ஏனைய பிரிவினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட கூடுதலாக 10 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இந்த செயல் அலுவலர் பதவிக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்படும். மேலும் காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.06.2022
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 11.09.2022
  • தாள் I: கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு., பொது அறிவுத் தேர்வு
  • தாள் II: இந்துமதம், சைவமும், வைணமும்
  • TNPSC Online Classes
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!