தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பினை முன்னதாக அரசு வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் பற்றிய அறிவிப்பை இந்த பதிவில் காணலாம்.

அரசு வேலைவாய்ப்பு:

அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்புகள் சமீப காலமாக அதிக அளவில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO) பகுதி நேர துப்புரவாளர் ஆண் மற்றும் பெண்கள் காலியிடங்களுக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download

அரசு அறிவிப்பின் படி, இப்பணிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 01.07.2022ன் தேதியின் படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின வகுப்பினர் 18 முதல் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.3,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட பிற்படுத்தோர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மாதிரி விண்ணப்பம் பெற்று செப்டம்பர் 15ம் தேதியான நாளைக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!