தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் ஒவ்வொரு துறை சார்ந்த போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2,2A தேர்வு மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்புகள் வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்தது. ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற அரசுத்துறைகளுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி வருகிறது. அதற்கான ஆட்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரகவளர்ச்சியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

அம்மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. வாகன ஓட்டுநர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பெறப்பட்டசெல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் பணியில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக அலுவலக உதவியாளர் பணிக்கு கல்வி தகுதி 8ம் வகுப்பு ஆகும். இத்தகைய பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் ரத்து? செலவீனத்துறை எச்சரிக்கை!

விண்ணப்பிக்க விரும்புவோர்கள்  www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் அதனை ஜூலை 5ம் தேதி மாலைக்குள் நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம்-629177 என்ற முகவரிக்கோ விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். நேர்காணல் நடைபெறும் நாள் , இடம் குறித்து பதிவு தபால் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!