4% அகவிலைப்படி உயர்வு.. உச்சகட்ட சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள் – வரவேற்கும் மக்கள்!

0
4% அகவிலைப்படி உயர்வு.. உச்சகட்ட சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள் - வரவேற்கும் மக்கள்!
4% அகவிலைப்படி உயர்வு.. உச்சகட்ட சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள் - வரவேற்கும் மக்கள்!
4% அகவிலைப்படி உயர்வு.. உச்சகட்ட சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள் – வரவேற்கும் மக்கள்!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதன் படி 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 38 சதவிகிதமாக உயர்த்தப்பட இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (செப். 28) டெல்லியில் நடைபெற்றது. வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த முறை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு தற்போது 34 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அகவிலைப்படி உயர இருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் அகவிலைப்படி 4 சதவிதம் உயர்த்தி, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை ஈடுகட்ட இந்த கூடுதல் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 38 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்டாலே தலை சுத்துது.. தீபாவளி வரும் நேரத்தில் எக்குத்தப்பாய் உயர்ந்த தங்கத்தின் விலை!

Exams Daily Mobile App Download

இது கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும், இந்த அகவிலைப்படி உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,852.56 கோடி கூடுதல் செலவாகும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!