தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் & நடத்துனர்களுக்கு ஜாக்பாட் – இரட்டிப்பு வசூல்படி! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் & நடத்துனர்களுக்கு ஜாக்பாட் - இரட்டிப்பு வசூல்படி! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் & நடத்துனர்களுக்கு ஜாக்பாட் - இரட்டிப்பு வசூல்படி! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் & நடத்துனர்களுக்கு ஜாக்பாட் – இரட்டிப்பு வசூல்படி! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படும் வசூல்படி இனி இரட்டிப்பாக கொடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

கூடுதல் வசூல்படி

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்ற பின்னர், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சாதாரண கட்டணம் கொண்ட நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த சேவையின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் நகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஆகியோர் வசூல்படியை பெற முடியாத சூழல் நிலவுகிறது. அதாவது, பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்வதால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கிடைக்கும் வசூல்படி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படியை உயர்த்தி வழக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தது.

வீடு வாடகைக்கு தேடி அலையும் கதிர், கடை பொறுப்புகளை கவனிக்கும் ஜீவா – இன்றைய எபிசோட்!

இதை கவனத்தில் கொண்ட அரசாங்கம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் வசூல்படியை இரட்டிப்பாக்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசுப்பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான 14வது ஊதியக் குழுவின் கீழ் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், முதன்மைச் செயலர் கே.கோபால், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஊழியர்களுக்கு வசூல்படியை உயர்த்தி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் சாதாரண கட்டணம் உள்ள அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பெற்று வந்த வசூல்படி குறைந்தது. இதை ஈடு செய்யும் பொருட்டு வசூல்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசுப்பேருந்து ஊழியர்களுக்கும் இனி வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது,.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here