டிச.25 மற்றும் ஜன.1ம் தேதியன்று இரவு ஊரடங்கு தளர்வுகள் – அரசு அறிவிப்பு!

0
டிச.25 மற்றும் ஜன.1ம் தேதியன்று இரவு ஊரடங்கு தளர்வுகள் - அரசு அறிவிப்பு!
டிச.25 மற்றும் ஜன.1ம் தேதியன்று இரவு ஊரடங்கு தளர்வுகள் - அரசு அறிவிப்பு!
டிச.25 மற்றும் ஜன.1ம் தேதியன்று இரவு ஊரடங்கு தளர்வுகள் – அரசு அறிவிப்பு!

புதுச்சேரியில் வருகின்றன டிச.25 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 2 நாளைக்கு மட்டும் அதிகாலை 2 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

கொரோனா 2ம் அலைபரவல் காரணமாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தளர்த்தி வரும் நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மீண்டுமாக மாநிலங்கள் தோறும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்க வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக தளர்த்துவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய ராதிகா, உதவிக்கு கோபியை அழைத்த மயூரா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி வரை நடைமுறையில் இருந்து வரும் இரவு ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. இதை தொடர்ந்து டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டிசம்பர் 24, 25, 30 மற்றும் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி சமூக கலாச்சார கூட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – எமிஸ் பதிவுக்கு எளிய வழிமுறைகள்!

மேலும் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு தேவாலயங்களை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், புத்தாண்டு தினத்தன்று (டிச.31) அனைத்து மத ஸ்தலங்களை இரவு 10 மணிக்குப் பிறகு திறக்கவும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. தவிர உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மதுபான கடைகள் ஆகியவையும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆணையத்தின் ஒப்புதலுடன், புத்தாண்டு தினத்தன்று வழக்கமான நேரத்திற்கு அப்பால் இந்த கடைகள் செயல்படலாம் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!