தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்கள் பள்ளிகள் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்கள் பள்ளிகள் விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 18,19 ஆகிய இரு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்ததால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளால் தீவிரம் காட்ட தொடங்கியது. அதன் விளைவாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் ரத்து? பரவும் போலி செய்தி!

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பட்டதற்கான தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 – மாநில அரசு அறிவிப்பு!

இதனை முன்னிட்டு பள்ளிகளுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று (பிப்ரவரி 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு மட்டும் பிப்ரவரி 18ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாகவும், ஆசிரியர்கள் தேர்தல் பணி அலுவலர்களாகவும் செயல்படுவதால் விடுமுறை தவிர்க்க முடியாதது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!