தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பயன் கிடையாது? ஐகோர்ட் அதிரடி!
அரசு உதவி பெரும் பள்ளியில் பணியாற்றி பாதியிலேயே ராஜினாமா செய்துவிட்டு அரசு பள்ளியில் சேர்ந்தால் அந்த ஆசிரியர்களுக்கு முந்தைய பணிப்பயன் கிடையாது என ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணிப்பயன்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கிட்டத்தட்ட 10,331 காலிபணியிடங்கள் உள்ளன. பெரும்பாலும் இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன. ஏற்கனவே, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இன்னும் பணியிடம் நியமிக்கப்படாமேலே உள்ளது. மேலும், இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வின் அடிப்படையில் தான் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக பணியிடங்கள் நிரப்ப காலதாமதம் ஆகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுவிட்டன.
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் வினாவங்கி!
இந்நிலையில், அரசு உதவி பெரும் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசு பள்ளியில் வேலைக்கு சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாது என ஐகோர்ட் கிளை அறிவித்துள்ளது. அதாவது, ஓய்வூதிய விதிப்படி ஆசிரியர் பதவியில் இருந்து தானே விலகினால் பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக கணக்கிட முடியாது என திடீர் அறிவிப்பு ஒன்றை ஐகோர்ட் கிளை வெளியிட்டுள்ளது.