மாதம் ரூ.21,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
மாதம் ரூ.21,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மாதம் ரூ.21,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மாதம் ரூ.21,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்களுக்கான அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியிடப்பட்டிருந்தது. அந்த வேலைவாய்ப்புக்கு கணினி உதவியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு:

அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று பல லட்சக்கணக்கான பட்டதாரிகள் பணிக்காக காத்திருக்கின்றனர். அத்தகைய பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை, புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவு திட்டத்தின் கீழ்‌ மத்தூர்‌ ஊராட்சி ஒன்றியத்தில்‌ காலியாக உள்ள கணினி உதவியாளர்‌ பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கணினி உதவியாளர்‌ பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே உள்ளது.

இப்பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம், கணினியில்‌ M.S.Office -இல்‌ அனுபவம்‌ உடையவராகவும் மற்றும் இளநிலை தட்டச்சில்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். கணினி உதவியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 01.07.2022 தேதியின் படி, 21 முதல் 40 க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், இப்பணிக்கு மாதம் ரூ.12000/- மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TN’s Best Coaching Center

கணினி உதவியாளர் பணிக்கு தகுதியானவரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு போன்ற உரிய முறையில் அவரே தேர்வு செய்வார். விண்ணப்ப பதிவிற்காக https://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தினை முழுவதுமாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் செப்டம்பர் 21ம் தேதியான நாளைக்குள் சென்றடைய வேண்டும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு),
அறை எண். 18, தரைத்தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,கிருஷ்ணகிரி.

NOTIFICATION

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!