ராதிகாவை பார்க்க சென்ற கோபி, ராஜேஷ் உடன் நடந்த பெரிய சண்டை – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவை பார்க்க சென்ற கோபி, ராஜேஷ் உடன் நடந்த பெரிய சண்டை - இன்றைய
ராதிகாவை பார்க்க சென்ற கோபி, ராஜேஷ் உடன் நடந்த பெரிய சண்டை - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவை பார்க்க சென்ற கோபி, ராஜேஷ் உடன் நடந்த பெரிய சண்டை – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி இனியாவிடம் எனக்கு நீ தான் முக்கியம் உனக்காக தான் நான் எல்லாம் செய்கிறேன் என சொல்கிறார். பின் மயூராவை பார்க்க ராதிகா வீட்டிற்கு செல்ல அங்கே ராதிகா கோவமாக பேசி வெளியே போக சொல்லி சண்டை போடுகிறார். அப்போது ராஜேஷ் வந்து பேச கோபி ராஜேஷ் இடையே பெரிய சண்டை வருகிறது.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி இனியாவிடம் உனக்காக தான் அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன். எனக்கு பல இடங்களில் வேலை கிடைத்தது ஏன் நிறைய வெளிநாடு வாய்ப்புகளும் கிடைத்தது. ஆனால் உனக்காக அதை எல்லாம் நான் விட்டு விட்டேன். இப்போது அலுவலக வேலை இருப்பது உண்மை தான் ஆனால் அதனால் உன் மீது எனக்கு பாசம் இல்லை என நீ சொல்லாதே, அதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என கோபி சொல்கிறார். வேலை எல்லாம் முடிந்த பின் நாம் இருவரும் பேசி நல்ல இடத்திற்கு டூர் போகலாம் என சொல்ல பாக்கியா அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.

Exams Daily Mobile App Download

இப்போது எனக்கு ஷாப்பிங் போக வேண்டும் என இனியா சொல்ல கோபி சரி என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா வீட்டிற்கு கோபி செல்கிறார். அங்கே மயூரா கோபியை பார்த்துவிட்டு வர மயூராவிற்கு சாக்லேட் வாங்கி கொடுக்கிறார். ஆனால் மயூரா வேண்டாம் அம்மா திட்டுவார் என சொல்ல ஆனால் கோபி சும்மா வாங்கிக் கொள் என சொல்கிறார். மயூரா வேண்டாம் என சொல்ல அப்போது ராதிகா வந்துவிடுகிறார். ராதிகா கோபியை பார்த்து நீங்க எதற்கு இங்கே வந்தீங்க என கேட்கிறார். நான் மயூராவை பார்க்க கூடாது என கோபி சொல்ல ராதிகா எதுவும் வேண்டாம் என வாசலில் சத்தம் போடுகிறார்.

அப்போது ஏரியா மக்கள் வந்துவிட ராதிகா வீட்டை வேடிக்கை பார்க்கின்றனர் அந்த பக்கம் ராஜேஷ் வருகிறார். அவரும் நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்க்கிறார். கோபியை வெளியே போக சொல்லி ராதிகா சத்தம் போட ஏன் வெளியே நின்று சத்தம் போடுகிறாய் என ராதிகாவின் அம்மா கேட்கிறார். ஆமாம் உள்ளே சென்று பேசுவோம் என கோபி சொல்ல எதுவும் வேண்டாம் என ராதிகா சொல்கிறார். பின் அக்கம் பக்கத்தினர் எப்போ பார்த்தாலும் பிரச்சனையாக இருப்பதாக பேசிக் கொள்கின்றனர்.

மூர்த்திக்கான மருத்துவ செலவினை பார்த்து கொள்வதாக கூறும் கதிர் – ப்ரோமோ ரிலீஸ்!

ராதிகா அடிக்கடி இங்கே வந்து எங்க நிம்மதியை கெடுக்காதீங்க என சொல்ல அப்போது ராஜேஷ் வருகிறார் மயூரா வா என கூப்பிட ஆனால் மயூரா பயந்து ஒளிகிறார். பின் ராஜேஷ் உன்னை வைத்துக் கொண்டு ஏன் சண்டை போடுகிறார்கள் என கேட்க ராதிகாவின் அம்மா அதெல்லாம் அவங்க பேசிப்பார்கள் என சொல்கிறார். என் மகளை வைத்துக் கொண்டு ஏன் சண்டை போடுகிறார்கள் என ராஜேஷ் கேட்க ராதிகா கோபியை எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என சொல்கிறார். அதான் சொல்கிறார் கிளம்ப வேண்டியது தான என கேட்க ராஜேஷ் நான் மயூராவின் அப்பா என சொல்கிறார்.

அதெல்லாம் முடிந்துவிட்டது என ராதிகா சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று கதவை அடைத்துக் கொள்கிறார். அப்போது ராஜேஷ் நான் வர கூடாது என வீடு மாறினாய் இப்போது என்ன ஆச்சு என கேட்க ராஜேஷ் போய் கோபி வந்த மாதிரி கோபி போய் சந்தோஷ் வந்துவிட்டான என கேட்கிறார். அதை கேட்டு கோபிக்கு கோவம் வந்து ராஜேஷை அடித்து விடுகிறார். உன்ன மாதிரி ஆளு கூட பேசுவதே தவறு என சொல்லிவிட்டு கோபி செல்கிறார். பின் ராஜேஷ் ராதிகாவிடம் சண்டை போடுகிறார். ராதிகா அம்மா கேட்க என் மயூராவை உங்களிடம் கொடுத்தால் அவளை கெடுத்துவிடுவீர்கள் என சொல்கிறார்.

நான் குடிகாரன் என சொல்லி கோபியை தேடி சென்றாய் இப்போது வேறு ஆள் பார்த்துவிட்டாய் என சொல்ல ராதிகாவின் அம்மா சத்தம் போடுகிறார். இதை எல்லாம் வெளியே நின்று செல்வி பார்க்கிறார். அக்கம் பக்கத்தினர் தினமும் ஒரு ஆள் வந்து சண்டை போடுவதாக பேசிக் கொள்கின்றனர். மயூராவை வா என கூப்பிட ராதிகா மயூராவை அழைத்து கொண்டு உள்ளே செல்கிறார். பின் ராதிகாவின் அம்மா ராஜேஷை வெளியே போக சொல்கிறார்.

பின் கோபி கோவமாக வீட்டிற்கு வந்து வேலையை பார்க்கிறார். அப்போது செல்வி வர ஈஸ்வரி நான் சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டாயா என கேட்கிறார். செல்வி இல்லை என செல்ல, அப்போது பாக்கியா சொன்ன வேலையை சரியாக செய்ய மாட்டியா என கேட்கிறார். அப்போது ராதிகா வீட்டில் பெரிய சண்டை என சொல்ல ஒரு ஆள் வந்து சண்டை போட்டதாக சொல்கிறார். யார் அது என பாக்கியா கேட்க அது மயூராவின் அப்பா போல என சொல்கிறார். அக்கம் பக்கத்தினர் சரியாக அவர்களை பேசவில்லை என சொல்ல ஈஸ்வரி விவாகரத்து முடிந்தால் அவளை நிம்மதியாக விடாமல் இருக்கிறாரே என நினைத்து வருத்தப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!