ராதிகாவை திருமணம் செய்வேன் என உறுதியாக சொன்ன கோபி, மறுக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவை திருமணம் செய்வேன் என உறுதியாக சொன்ன கோபி, மறுக்கும் ராதிகா - இன்றைய
ராதிகாவை திருமணம் செய்வேன் என உறுதியாக சொன்ன கோபி, மறுக்கும் ராதிகா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவை திருமணம் செய்வேன் என உறுதியாக சொன்ன கோபி, மறுக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவின் அண்ணன் கோபியை திருமணம் செய்வீர்களா என கேட்க அப்போது கோபி எனக்கு ராதிகா தான் முக்கியம் என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா பாக்கியாவிடம் பிரச்சனை பற்றி மனம் திறந்து பேசுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவின் அண்ணன் கோபியிடம் நீங்க கண்டிப்பாக ராதிகாவை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்க, அப்போது கோபி எனக்கு ராதிகா தான் முக்கியம் நான் பாக்கியா தான் என்னுடைய மனைவி என்பதை மறைத்ததை தவிர எந்த தவறும் செய்யவில்லை. நான் ராதிகாவை சென்னை வந்து சந்திக்கவில்லை. அவளை திருநெல்வேலியில் இருந்தே எனக்கு தெரியும், நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

அதை கேட்டு சந்துரு நான் ராதிகாவிடம் பேசி பார்க்கிறேன் என சொல்கிறார். என்னால் தான் ராதிகாவுக்கு இந்த நிலைமை என நினைத்தே எனக்கு வருத்தமாக இருக்கிறது என கோபி சொல்ல ராதிகாவின் அம்மா நான் கிளம்புகிறேன் என சொல்கிறார். பின் பாக்கியா இப்போது எப்படி இருக்கீங்க என கேட்க ராதிகா அவர் எல்லாம் செய்துவிட்டு இப்போது பிரிந்துவிடுவேன் என இப்படி செய்ததாக சொல்கிறார் என சொல்ல, உடனே பாக்கியா அது உண்மையாக கூட இருக்கலாம். உங்களை அவர் நன்றாக பார்த்துக் கொள்வாரா மயூராவை நன்றாக பார்த்துக் கொள்வாரா என்பது தான் முக்கியம் என சொல்கிறார்.

பின் ராதிகா அவர் செய்தது பெரிய தவறு என சொல்ல மயூராவிற்கு அவரை மிகவும் பிடித்து இருக்கிறது. அது தான் முக்கியம் என சொல்கிறார். உங்க அம்மா போல நான் நீங்க அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சாமியிடம் வேண்டிக் கொள்கிறேன். மயூராவிற்காக நீங்க அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். கொஞ்ச நாள் அமைதியாக இருங்க எல்லாம் சரியாகிவிடும் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியா ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்க கோபி காரில் வந்து அவரை ஏற்றிக் கொள்கிறார்.

பாக்கியா ராதிகா வீட்டிற்கு சென்று வருகிறேன் என சொல்ல கோபி பதட்டம் அடைகிறார். சும்மா தான் போனேன் என சொல்ல, எப்படி இருக்காங்க என பார்க்க போனேன் மயூரா தனியாக இருந்தால் என சொல்கிறார். கோபி எதுவும் தெரியாதது போல பேச ராதிகாவை பார்த்ததாக சொல்கிறார். அவர் மிகவும் பாவம் என பாக்கியா வருத்தப்பட்டு பேசுகிறார். மறுபக்கம் ராதிகாவின் அண்ணனிற்கு சாப்பாடு கொடுக்கிறார். ராதிகாவின் அண்ணன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொல்ல ராதிகா கல்யாணம் முடியாது என சொல்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் நீ எழுதி கொடுத்தாய் என சொல்ல, மயூரவிற்காக தான் எழுதி கொடுத்தேன் டீச்சருக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என சொல்கிறார். ராதிகாவின் அம்மா நீ கோபியை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் ராஜேஷ் மீண்டும் சண்டை போடுவான் என சொல்கிறார். நான் மயூராவை கூட்டிக் கொண்டு சென்றுவிடுகிறேன் என சொல்ல, இனிமேல் இது பற்றி பேசாதீங்க என சொல்கிறார். ராதிகாவின் அண்ணன் பிரச்சனையை சரி செய்துவிடலாம் என சொல்கிறார்.

பார்வதியிடம் சத்தம் போட்ட முல்லை, எந்த பிரச்சனை இன்றி கண் விழித்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் மயூரா சோகமாக இருக்க ராதிகா மம்மி செய்ததை நீயும் தவறு என நினைக்கிறீயா என கேட்கிறார். இப்போது உனக்கு தவறாக தெரிவது எல்லாம் பின் நல்லதாக தெரியும். நீ வருத்தப்படுவதால் இந்த முடிவை நான் எடுத்தால் பின் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என சொல்ல மயூரா கோபி பாவம் என சொல்கிறாள். கோபி அங்கிள் பாவம் என நீ நினைக்கிறாய். பாக்கியா ஆன்டி பாவம் என நான் நினைக்கிறன் என ராதிகா சொல்ல மயூரா பாக்கியா ஆன்டி ஏன் பாவம் என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here