கோபி, ராதிகாவின் திருமண வைபோகம் – மணக்கோலத்தில் இருக்கும் கோபியை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா!

0
கோபி, ராதிகாவின் திருமண வைபோகம் - மணக்கோலத்தில் இருக்கும் கோபியை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா!
கோபி, ராதிகாவின் திருமண வைபோகம் - மணக்கோலத்தில் இருக்கும் கோபியை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா!
கோபி, ராதிகாவின் திருமண வைபோகம் – மணக்கோலத்தில் இருக்கும் கோபியை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா!

கோபியை குறித்த அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு எப்போது தான் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் கோபி மற்றும் ராதிகாவின் திருமண வைபோகம் இந்த வாரம் நடைபெறப் போவதாக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்து மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு கோபியும் ராதிகாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற விஷயம் ஏற்கனவே தெரிந்து விடுகிறது.

பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு குழுவினர்களுடன் ட்ரிப் சென்ற விஜய் – குஷியில் ரசிகர்கள்!

ஆனாலும், கோபியை கண்டித்து விட்டுவிடுகிறார். ஆனால் கோபியின் ஆட்டம் கொஞ்சம் கூட அடங்கவில்லை. இதனால் கோபியின் ஆட்டத்தை உடனே அடக்க வேண்டும் என நினைத்து வீட்டில் பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு ராதிகாவிடம் காட்ட ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். ஆனால் ராமமூர்த்தி, ராதிகாவின் வீட்டிற்கு செல்லும்போது ராதிகா அந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்று விடுகிறார். இதற்குப்பிறகு மயூவின் பிறந்தநாளுக்கு பாக்கியா தான் சமைத்து தர வேண்டும் என சொல்லி பாக்கியாவை தேடி ராதிகா வருகிறார்.

சஞ்சீவ் குறித்து ஆல்யா மானசா சொன்ன சூப்பர் தகவல் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

அப்போது செல்வி ராதிகாவிடம் நீ திருமணம் செய்து கொள்ளப்போகும் கணவரை மட்டும் எங்களது கண்ணில் காட்டவே மாட்டேங்கிறாய் என கூறுகிறார். உடனே ராதிகாவும் கோபியின் புகைப்படம் மொபைல் போனில் இருக்கிறதா என தேடுகிறார். ஆனால், கோபியின் புகைப்படம் ஏதும் இல்லாத காரணத்தினால் நான் எனது கணவரை உங்களுக்கு நேரடியாகவே அறிமுகம் செய்து வைக்கிறேன் எனக் கூறி கிளம்பி விடுகிறார். எப்போதுதான் பாக்கியாவிடம் கோபி மாட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாரம் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் நடைபெற இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!