பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கோபி – நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!

0
பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கோபி - நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!
பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கோபி - நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!
பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கோபி – நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!

பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர் மனதில் இடம்பிடித்த கதாபாத்திரம் கோபி கதாபாத்திரம் ஆகும். இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகர் சதீஸ் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகி உள்ளதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சீரியலை விட்டு விலகும் கோபி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பல காலமாக தொடர்ந்து டாப் 5 இடங்களில் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வயதுள்ள பெண்ணின் கதை மற்றும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவை இல்லத்தரசிகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அது மட்டுமின்றி அவருக்கு எதிரான பாத்திரங்களும் வலிமையாக இருப்பதால் சீரியல் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் நாயகன் கோபி மனைவியை பிடிக்காமல் குடும்பத்திற்காக சகித்து கொண்டு வாழ்த்து கொண்டிருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

அந்த சமயத்தில் சந்திக்கும் முன்னாள் காதலி மீது மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள், குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் பாக்யாவின் தியாகம் என விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். பாக்கியலட்சுமி’ தொடரில் வரும் கோபி, எப்போது தன்னுடைய மனைவி பாக்கியா மற்றும் ராதிகாவிடம் வசமாக சிக்கப் போகிறார் என்பதில் தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கோபியின் அப்பா, ராமமூர்த்திக்கு கோபி – ராதிகா பற்றிய விஷயம் தெரிந்ததில் இருந்து சீரியலில் தினமும் ஒரு ட்விஸ்ட், பரபரப்பான திரைக்கதை என பாக்கியலட்சுமி சீரியலை இயக்குனர் ட்விஸ்டுடன் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வைரலாகும் வீடியோ!

பாக்கியாவின் கணவர் , கோபி தனது நடிப்பினால் அனைவராலும் வெறுக்கப்படும் நடிகர் ஆகிவிட்டார். ஏனென்றால் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அந்த அளவுக்கு கோபியை திட்டித் தீர்த்து வருகிறார்கள். கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் “சதிஷ் சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் மற்ற சீரியல்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பும், புகழும் இவர் தற்போது நடித்து வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும் இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபி இடைவெளி எடுத்துக் கொண்டு இருப்பதாக கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து விட்டேன் வயசாகி விட்டது, அதனால் வார இறுதி நாட்களில் இடைவெளி எடுத்துக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!