மீண்டும் பாக்கியாவை ஏமாற்ற திட்டம் போட்டு மாட்டிக் கொண்ட கோபி – பாக்கியாவின் முடிவு என்ன?

0

மீண்டும் பாக்கியாவை ஏமாற்ற திட்டம் போட்டு மாட்டிக் கொண்ட கோபி – பாக்கியாவின் முடிவு என்ன?

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் உண்மையான முகம் என்ன என்பதை குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்கு கோபி மீது கடும் கோவத்தில் உள்ளனர். தற்போது வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடக்க இருக்கும் அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாபாத்திரம் தனது கணவர் கோபி மீது அளவு கடந்த நம்பிக்கையும், பாசமும் வைத்திருக்கும் படியாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோபி தனது மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பொய்யாக நடித்து ஏமாற்றுகிறார். மேலும், இவரது சிறு வயது காதலி ராதிகாவை தற்போது திருமணம் செய்து கொள்ள நினைத்து, அதற்காக பல ஏமாற்று வேலைகளையும் ஆரம்பத்தில் இருந்து செய்து வந்தார். குறிப்பாக, கோபியின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகம் கொள்ளும்படியாக இருப்பதாக செல்வி பாக்யாவிடம் அடிக்கடி கூறுவார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா – 19 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!

ஆனால் பாக்கியா கோபி மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக செல்வியை திட்டி, அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்று கூறுவார். ஒருகட்டத்தில், பாக்கியா கோபி விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக வந்த தகவலின் படி அங்கு செல்கிறார். அப்போது தான் கோபி தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயத்தை அறிந்து கொள்கிறார். ஆனால், உண்மை தெரிந்த பிறகு இத்தனை நாட்களாக கேட்க வேண்டிய கேள்விகள் அனைத்தையும் மொத்தமாக கேட்டு விட்டு, வீட்டை விட்டே வெளியேறிவிட்டார்.

இருப்பினும், பாக்கியா வீட்டை விட்டு சென்றது கூட கோபிக்கு கவலையாக இல்லை, தனது மகள் இனியா தன்னிடம் கோபித்துக் கொண்டதும், அழுதுகொண்டே இருப்பதும், தனது அம்மா ஈஸ்வரி பாக்கியா இல்லை என்றால் நாங்களும் இருக்க மாட்டோம் என்று கூறியதும் தான் கோபிக்கு கவலையாக இருக்கிறது. இதனால் ராதிகா சமாதானம் ஆகும் போது அவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை பாக்கியாவை ஏதவாது சொல்லி சமாளித்து வீட்டிற்கு கூடி வர வேண்டும் என்று திட்டம் போட்டு, பாக்கியா இருக்கும் இடத்திற்கு சென்று பாக்கியாவை வீட்டிற்கு கூப்பிடுகிறார்.

ஆனால், திரும்பவும் இதே போல் நடக்காது என்று எப்படி நான் நம்புவது என்று பாக்கியா கேட்கிறார். அதற்கு, சாத்தியமா நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது ராதிகா என்று கோபி தன் வாயாலேயே மாட்டிக் கொள்கிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சியுடன் கோபியை பார்ப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதன்பிறகும், கோபி சொல்லும் பொய்களை பாக்கியா நம்பி வீட்டிற்கு செல்வாரா அல்லது கோபியை அங்கிருந்து விரட்டி விடுகிறாரா என்பதை வரும் வாரத்தில் தான் காணமுடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here