மூர்த்தியிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி, கடுப்பில் ராதிகா – ‘மகா சங்கமம்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
மூர்த்தியிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி, கடுப்பில் ராதிகா - 'மகா சங்கமம்' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மூர்த்தியிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி, கடுப்பில் ராதிகா - 'மகா சங்கமம்' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மூர்த்தியிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி, கடுப்பில் ராதிகா – ‘மகா சங்கமம்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் சீரியலில், தாத்தாவின் பிறந்தநாளுக்காக மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் கோபி வீட்டிற்கு வருகின்றனர். இந்நிலையில் இரவு கோபிக்கு போன் வர மூர்த்தியிடம் அவர் வசமாக சிக்கிக் கொள்கிறார்.

மகா சங்கமம்:

ராமமூர்த்திக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் அவருடைய பிறந்தநாளை நல்லபடியாக கொண்டாட வேண்டும் என பாக்கியாவும் ஈஸ்வரியும் திட்டமிடுகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அவர்கள் வீட்டிற்கு அழைக்கின்றனர். அவர்களும் முல்லை வருத்தமாக இருப்பதால் மனம் மாற வேண்டும் என நினைத்து சென்னைக்கு வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த கோபி வீட்டில் நிறைய பேர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

Exams Daily Mobile App Download

அவருக்கு அவர்கள் வீட்டில் இருப்பது பிடிக்காமல் இருக்கிறது. அதனால் பாக்கியாவை அழைத்து அவர்களை போக சொல் என சொல்கிறார். ஆனால் பாக்கியா அத்தை தான் வர சொன்னதாக சொல்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க அனைவரையும் வீட்டில் படுக்க வைக்க இடம் இல்லாமல் இருக்கிறது. இனியா ரூமில் சிலர் படுக்க ஆண்கள் எல்லாரும் கோபியுடன் படுகின்றனர். கோபியை நடுவில் படுக்க வைத்து அவர்கள் படுத்துக் கொள்கின்றனர்.

‘நான் மர்மமான முறையில் இறந்தால்’ – உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்க் பரபரப்பு ட்வீட்!

அதனால் கோபி கடுப்பில் இருக்கிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் கோபி இரவு அனைவரிடமும் படுத்துக் கொண்டிருக்க அப்போது ராதிகா போன் செய்கிறார். அதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த மூர்த்தி இந்த நேரத்தில் யார் உங்களுக்கு போன் செய்வது. இரவெல்லாம் இப்படி போன் வருவது சரி இல்லை என சத்தம் போடுகிறார். அதனால் கோபி வசமாக மாட்டிக் கொண்டு முழிக்கிறார். மறுபக்கம் கோபி பேசாமல் இருப்பதால் ராதிகா கோவமாக இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here