கோபியை வீட்டை விட்டு துரத்தும் எழில் – நடு ரோட்டில் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
கோபியை வீட்டை விட்டு துரத்தும் எழில் - நடு ரோட்டில் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியை வீட்டை விட்டு துரத்தும் எழில் - நடு ரோட்டில் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியை வீட்டை விட்டு துரத்தும் எழில் – நடு ரோட்டில் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!

பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது கூட கோபி உதவிக்கு வரவில்லை. இதனால் கோபியின் மீதுள்ள கோவத்தில் எழில் கோபியை வீட்டை விட்டு விரட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் எப்போது தான் தெரியவரப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாக்கியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

ஆர்டர் கொடுத்தவரையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பாக்கியாவை நம்பி தானே சமைக்க கொடுத்தோம். ஆனால், இவர் நம்மை இப்படி கைது செய்யும் அளவிற்கு கொண்டுவந்துவிட்டார் என பாக்கியா மீது ராதிகா கொலைவெறியில் உள்ளார். பாக்கியாவை காவல் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், கோபி குடும்பத்தில் உள்ள எவரின் காலையும் அட்டென்ட் செய்யவில்லை.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – நேர மாற்ற விபரங்கள்!

பின்பு, ராதிகாவை மட்டும் கோபி மறைமுகமாக காவல் நிலையத்தில் இருந்து கூட்டி வருகிறார். கோபியிடம் ராதிகா இனிமேல் நான் பாக்கியாவின் முகத்திலேயே முழிக்க மாட்டேன் என கூறி கத்துகிறார். பின்பு, பாக்கியா சமைத்ததால் யாரும் மயக்கமாகவில்லை, உணவில் யாரோ விஷத்தை கலந்திருக்க வேண்டும் என போலீசாரிடமும் நிரூபித்து எழில் பாக்கியாவை வெளியே கொண்டு வருகிறார். அம்மா, இவ்வளவு கஷ்டத்தில் இருந்து அப்பா கொஞ்சம் கூட உதவியாக இல்லை என கூறி கோபியை எழில் வீட்டை விட்டு விரட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here