ராதிகாவுக்காக மீண்டும் பாக்கியாவின் தொழிலை தொடங்க ஒப்புக்கொள்ளும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

0
ராதிகாவுக்காக மீண்டும் பாக்கியாவின் தொழிலை தொடங்க ஒப்புக்கொள்ளும் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவுக்காக மீண்டும் பாக்கியாவின் தொழிலை தொடங்க ஒப்புக்கொள்ளும் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவுக்காக மீண்டும் பாக்கியாவின் தொழிலை தொடங்க ஒப்புக்கொள்ளும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியாவை கோபி பிசினஸை இனிமேல் செய்ய வேண்டாம் என கூறிவிட்ட நிலையில் ராதிகா பாக்கியாவிற்கு மிகவும் சப்போர்ட் செய்த காரணத்தினால் மீண்டும் பாக்கியாவிடம் சென்று கோபி உனது பிசினஸை மீண்டும் செய் என்று கூறும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு எப்போது தான் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வரப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவும் ராதிகாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் எப்படியும் தன்னைப்பற்றிய உண்மைகள் இருவருக்கும் தெரிய வந்து விடுமோ என பயந்து இருவரையும் பிரிக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது மயூவின் பிறந்தநாளுக்காக சமைக்கச் சொல்லி பாக்கியாவிடம் ராதிகா கொடுத்திருப்பார்.

Exams Daily Mobile App Download

இருவரையும் பிடிக்க நினைத்து பாக்கியா சமைத்த சாப்பாட்டில் ஏதோ ஒன்றை கோபி கலந்து விடுகிறார். பின்பு, பாக்கியா சமைத்ததை சாப்பிட்ட அனைத்து ஆதரவற்ற குழந்தைகளும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக காவல் நிலையத்திற்கு போலீசார் கூட்டி செல்கின்றனர். பாக்கியா காவல் நிலையத்தில் இருந்தபோது கூட கோபி அவரை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதன் பின்பு எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து பாக்கியாவை வெளியே அழைத்து வருகிறார்.

பிரியப்போகும் வெற்றி & அபி, ரசிகர்கள் அதிர்ச்சி – “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

பின்பு எதற்ச்சையாக பாக்கியாவும் ராதிகாவும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். உங்களுடைய பிசினஸ்க்கு எந்த தடங்கலும் இல்லை தானே என கேட்கிறார். அதற்கு பாக்கியா எனது கணவர் பிசினஸ் செய்ய வேண்டாம் என கூறிவிட்டார் என கூறுகிறார். உடனே ராதிகா கோபியிடம் சென்று பாக்கியாவின் கணவர் பிசினஸ் தொடங்க வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். நாம் அவரிடம் சென்று பேசுவோம் என கூறுகிறார். உடனே கோபி பாக்கியா பிசினஸ் தொடங்க வேண்டும் நான் அவருக்கு ஹெல்ப் செய்கிறேன் எனக்கூறி பாக்கியாவிடம் சென்று நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். நீ பிசினஸ் செய் என்று கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!