கூகுளின் இந்த AI சாட்போட்டால் 100 பில்லியன் டாலர் நஷ்டம் – கொடி கட்டி பறக்கும் Microsoft!

0
கூகுளின் இந்த AI சாட்போட்டால் 100 பில்லியன் டாலர் நஷ்டம் - கொடி கட்டி பறக்கும் Microsoft!
கூகுளின் இந்த AI சாட்போட்டால் 100 பில்லியன் டாலர் நஷ்டம் - கொடி கட்டி பறக்கும் Microsoft!
கூகுளின் இந்த AI சாட்போட்டால் 100 பில்லியன் டாலர் நஷ்டம் – கொடி கட்டி பறக்கும் Microsoft!

Microsoft நிறுவனத்தின் AI சாட்போடான ChatGPTக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ‘Bard’ என்ற சாட்போடை அறிமுகம் செய்தது. ஆனால் ‘Bard’ என்ற சாட்போட் தவறான தகவல்களை தருவது தெரிய வந்தது. இதனால் தற்போது கூகுள் நிறுவனம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

சாட்போட்

Microsoft நிறுவனத்தின் Chat GPT என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Chat GPT அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான OpenAIல் உருவாக்கப்பட்டதாகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் மனிதர்கள் போல் விரிவான முறையில் பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வெப்பநிலை – சென்னை வானிலை மையம் தகவல்!

Follow our Instagram for more Latest Updates

தற்போது Chat GPTக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் Chat GPT அறிமுகமானதில் இருந்து இதற்கு போட்டியாக கூகுள் ஒரு சாட்போட்டை அறிமுகப்படுத்த தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், கூகுள் நிறுவனம் ‘Bard’ என்ற சாட்போடை அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த சாட்போட்டிற்கான விளம்பர வீடியோ ஒன்றையும் கூகுள் வெளியிட்டிருந்தது.

அதில் பார்ட் சாட்போட் அளித்த பதில்கள் தவறாக இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் இணைய தேடலில் பிரபலமான கூகுள் நிறுவனத்தின் சாட்போட்டே தவறான தகவல்களை வழங்குவதால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் கூகுள் பங்கு விலை 9% சரிந்து 100 பில்லியன் டாலர் வரை இழப்பை கண்டுள்ளது. ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!