இந்தியாவின் அசிங்கமான மொழி ‘கன்னடம்’ – மன்னிப்பு கோரிய கூகிள் நிறுவனம்!

0
இந்தியாவின் அசிங்கமான மொழி 'கன்னடம்' - மன்னிப்பு கோரிய கூகிள் நிறுவனம்!
இந்தியாவின் அசிங்கமான மொழி 'கன்னடம்' - மன்னிப்பு கோரிய கூகிள் நிறுவனம்!
இந்தியாவின் அசிங்கமான மொழி ‘கன்னடம்’ – மன்னிப்பு கோரிய கூகிள் நிறுவனம்!

கூகுள் தளத்தில் இந்தியாவின் அசிங்கமான மொழி என்று ஆங்கில மொழியில் தேடுகையில் அதில் கன்னட மொழி தோன்றிய விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது இதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

கூகுள் நிறுவனம்:

இணைய தேடுபொறியில் மிக முக்கிய வாய்ந்த தளமாக திகழ்கிறது கூகுள் வலைத்தளம். கல்வி, பொழுதுபோக்கு போன்ற விவரங்கள் தேடுதலுக்கு இந்த நிறுவனம் தக்க பயனாக இருந்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கூகுளில் இந்தியாவின் அழகற்ற, அசிங்கமான மொழி என்று ஆங்கில மொழியில் பதிவிட்டு தேடுகையில் அதற்கு கன்னட மொழி என்று தோன்றியது. இந்த பதில் பல சர்ச்சையை ஏற்படுத்தியது.

TN Job “FB  Group” Join Now

கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் மக்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் இது குறித்து கர்நாடக பண்பாட்டுத்துறை அமைச்சர் அரவிந்த் அவர்கள் கூறியதாவது, கன்னட மொழி சுமார் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதனை கூகுள் நிறுவனம் இழிவுபடுத்தியுள்ளது. இதற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவை? மலிவு விலையில் குடிநீர் பாட்டில்!

தற்போது இந்த விவகாரத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் இதுகுறித்து கூகுள் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தேடுதல் விவகாரம் கூகுள் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்த ஒன்று. கன்னட மொழி அசிங்கமான மொழி என்பது கூகுளின் கருத்தில்லை. இந்த விவகாரம் குறித்து கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் மக்களிடம் கூகுள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. மேலும் இதற்கான உரிய நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!