இனி Amazon, Flipkart செயலிகளுக்கு குட் பை… மத்திய அரசு உருவாக்கிய புதிய தளம்!!

1
இனி Amazon, Flipkart செயலிகளுக்கு குட் பை... மத்திய அரசு உருவாக்கிய புதிய தளம்!!
இனி Amazon, Flipkart செயலிகளுக்கு குட் பை... மத்திய அரசு உருவாக்கிய புதிய தளம்!!
இனி Amazon, Flipkart செயலிகளுக்கு குட் பை… மத்திய அரசு உருவாக்கிய புதிய தளம்!!

இந்தியாவில் eCommerce என அழைக்கப்படும் மின்னணு வர்த்தகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது.

மின்னணு வர்த்தகம்

இந்தியாவில் தற்போது அனைத்து பொருட்களையும் ஆன்லைன் முறை மூலமாகவே பெரும்பாலானோர் வாங்கி வருகின்றனர். மேலும் இதற்கு Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் ரீடைல் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். அதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இதையடுத்து தற்போது ஒரு புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆதார் அட்டைதாரர்கள் இதை Follow பண்ணலைனா சிக்கல் தான் – இப்போவே தெரிஞ்சுக்கோங்க!

அதாவது Open Network for Digital Commerce என்ற ONDC தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இத்தளத்தை முதன் முதலில் இன்று பெங்களூரில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் சுமார் 20 நிறுவனங்கள் 255 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் முதலீடு செய்துள்ளனர். இந்த தளத்தை பயன்படுத்தி நாட்டில் இருக்கும் சிறு ரீடைல் விற்பனையாளர்களை ஒருங்கிணைக்க முடியும். அதன்பின்பு இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும்.

Exams Daily Mobile App Download

இதனால் பொதுமக்கள் தற்போது அதிகம் உபயோகித்து வரும் Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளை மறக்க ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிக லாபத்தை பெற முடியும். அதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலை உயரும். இந்த ONDC தளத்தில் Amazon, Flipkart உள்ளிட்ட செய்யலிகளில் பெறுவது போன்று பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளைச் சிங்கிள் பையர் செயலி மூலமாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது வாட்ச்-ஐ தேடினால் இத்தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் காண்பிக்கப்படுவார்கள். இதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை நீங்கள் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!