TCS நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – ’25X25 மாடல்’ பயன்முறை அறிமுகம்!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் - '25X25 மாடல்' பயன்முறை அறிமுகம்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் - '25X25 மாடல்' பயன்முறை அறிமுகம்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – ’25X25 மாடல்’ பயன்முறை அறிமுகம்!

கொரோனா வருகையால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது, பெரும்பாலான ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கினர். தற்போது தாக்கம் குறைந்து நிலை சீராகி வருவதால் TCS ஊழியர்கள் 25X25 மாடல்’ பயன்முறைக்கு மாற உள்ளதாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. புதிய திட்டத்தின்படி, 25 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே அலுவலகத்துக்கு பணிக்கு செல்ல வேண்டும்.

புதிய பயன்முறை:

கொரோனா வைரஸ் முதல் அலையைவிட கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை ஏற்பட்ட 2-வது அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். ஆனால், தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தபின் தற்போது கொரோனா தொற்றின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பல நாடுகளில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியும் அதற்கான தேவையும் ஏற்பட்டது. உலக அளவில் பல நிறுவனங்களும் பணியாளர்களும் அதைக் கடைபிடித்து வருகின்றனர்.

தருமபுரியில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கோவிட் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், கார்ப்பரேட் உலகம் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து பணியாற்ற முழு பலத்துடன் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஊழியர்களுக்கு ரிமோட் ஒர்க்கிங் பாலிசியை TCS அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ’25X25 மாடல்’ என அழைக்கப்படும். 25X25 மாடலை ஏற்றுக்கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய திட்டத்தின்படி, 25 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே அலுவலகத்துக்கு பணிக்கு செல்ல வேண்டும். ஊழியர்கள் 25 சதவீதத்துக்கு மேல் நேரத்தை அலுவலகத்தில் செலவிட வேண்டியதில்லை என்று TCS செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில் – பொதுமக்கள் அவதி!

மேலும் டிசிஎஸ் சிஎச்ஆர்ஓ மிலாண்ட் லக்காட், “25/25 மாடலுக்கு மாறுவதன் முக்கிய நோக்கம் மக்களை முதலில் அலுவலகங்களுக்கு அழைத்து வந்து, படிப்படியாக ஒரு கலப்பின வேலை முறையை செயல்படுத்துவதாகும்” என்று கூறியிருந்தார். உள்கட்டமைப்பை மேம்படுத்தி டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் நிறுவனம் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. உலகெங்கிலும் உள்ள TCS அலுவலகங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகவும் வலுவான பணியிடங்களை அமைத்துள்ளன. TCS ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதில் உற்சாகமாக இருப்பதாகவும், அனைத்து ஊழியர்களும் சக ஊழியர்களை நேரில் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். இந்த ஹைபிரிட் மாடல் ஊழியர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!