தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி – பயணிகள் கவனத்திற்கு!

0
தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி - பயணிகள் கவனத்திற்கு!
தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி - பயணிகள் கவனத்திற்கு!
தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி – பயணிகள் கவனத்திற்கு!

தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதை தொடர்ந்து 90% ரெயில்கள் இயக்கத்திற்கு வந்துள்ளன. பண்டிகை நேரத்தில் இந்த வசதி தொடங்கப்பட்டது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

தமிழகம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் ரெயில் போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து சில ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா இப்போது முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் 90% ரெயில்கள் இயக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தெற்கு ரெயில்வே-யின் சென்னை மண்டலத்தில் ரயில்வே வார விழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த விழாவில் 19 கெஸ்டட் அதிகாரிகளுக்கும், 438 கேஸ்டட் அல்லாத அதிகாரிகளுக்கும் மற்றும் 48 குழு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விருதுகளை விழாவில் கலந்துகொண்ட சென்னை மண்டல ரெயில்வே மேலாளர் கணேஷ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் விழாவில் பேசுகையில் 2020-21 ம் ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் 7.819 மில்லியன் டன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதனால் 1,407.23 கோடி ரூபாய் மத்திய அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதனை தொடர்ந்து 2021-22 செப்டம்பர் மாதம் வரை 4.454 மில்லியன் டன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மொபைல் நம்பர் இன்றி Aadhaar கார்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதன் மூலம் 1,175.59 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் ரெயில்கள் செல்லும் வேகம் மணிக்கு 40.1 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 50.1 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேகக்கட்டுப்பாடு முறையில் மாடர்ன் சிக்னலிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் பயணிகளுக்கான பல்வேறு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை எழும்பூர், தாம்பரம், திருவள்ளூர், மாம்பலம், அரக்கோணம், அம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 51 ரயில் நிலையங்களில் ஜிபிஎஸ் கடிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 19 ரெயில் நிலையங்களில் தானியங்கி அறிவிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம் ரெயில் நிலையங்களில் இலவச அவசர மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அக்.27ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான இறுதி முடிவு – மாநில அரசு அறிவிப்பு!

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மற்றும் சென்னை எழும்பூர்ரெயில் நிலையம் உள்ளிட்டவற்றில் 36 புதிய கேட்டரிங் யூனிட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தில் தற்போது 675 புறநகர் ரெயில் சேவைகளில் 643 செயல்படத் தொடங்கியுள்ளன. இவ்வாறாக 90% ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று கூறினார். இவை அனைத்தும் பயணிகளின் நலன் கருதி மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் ரெயில் போக்குவரத்து இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இத்தகைய போக்குவரத்து விரிவு மூலம் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவது தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை நேரத்தில் இவ்வாறு ரெயில் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டது அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!