பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – விரைவில் ரூ.1 கட்டணப் பேருந்துகள் இயக்கம்!

0
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் - விரைவில் ரூ.1 கட்டணப் பேருந்துகள் இயக்கம்!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் - விரைவில் ரூ.1 கட்டணப் பேருந்துகள் இயக்கம்!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – விரைவில் ரூ.1 கட்டணப் பேருந்துகள் இயக்கம்!

புதுவையில் பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபோன்ற ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள துறையினருக்கு போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அந்த வகையில் புதுவையில் மாணவா்களுக்கான ரூ. 1 கட்டணப் பேருந்துகள் இயக்கம் குறித்தமுக்கிய தகவலை போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

ரூ.1 கட்டணப் பேருந்துகள் இயக்கம்:

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வகையில், புதுவை யூனியன் பிரதேசத்தில், பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

ஒரு நாளுக்கு ரூ.2000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!

மேலும் புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சீத்தா ராமராஜூ, பிரசாத் ராவ், ஆய்வாளர்கள் ரமேஷ், தட்சிணாமூர்த்தி, சீனிவாசன், சண்முகநாதன், பாலசுப்ரமணியன், உதவி ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோர் 6 குழுக்களாக வாகனங்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து ஆய்வுப் பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா பாா்வையிட்டு, ஆய்வில் தரம் உறுதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு பரிசோதனைச் சான்றை வாகனத்தில் ஒட்டினாா்.

மேலும் ஆய்வின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதல் நாள் ஆய்வில் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் 32 ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு நடவடிக்கை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. எனவே கல்வி நிறுவனங்களும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி வாகனங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து புதுவையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போதே , மாணவா்களுக்கான ரூ.1 கட்டண பேருந்து இயக்குவதற்கு உரிய நடவடிக்கையை கல்வித் துறை அமைச்சா் எடுத்து வருகிறார் என்றும் கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here