தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் – தேர்வில்லாமல் ரூ.60000 சம்பளத்தில் அரசு பணி!

0
தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் - தேர்வில்லாமல் ரூ.60000 சம்பளத்தில் அரசு பணி!
தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் - தேர்வில்லாமல் ரூ.60000 சம்பளத்தில் அரசு பணி!
தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் – தேர்வில்லாமல் ரூ.60000 சம்பளத்தில் அரசு பணி!

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயன்பெறும் விதமாக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிய நிலையில், இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை ஜூன் 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா வருகையால் அதிகமான தொழிற்துறைகள் முடக்கப்பட்டது. இதனால் அலுவலகங்களில் பணியாளர்கள் பாதியாக குறைக்கப்பட்டனர். மேலும் சிலருக்கு பணி இழப்பும் ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை நிலவியது. இதை தடுக்கும் விதமாக அனைத்து மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு வேலை தேடும் திருப்பூர் மாவட்ட இளைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில், திருப்பூர் மாவட்டம் (TNRTP Tiruppur) ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பின் படி, மாவட்ட வளவாளர் (District Resource Person) பணியில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ. 2000 வீதம் ரூ.60000 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி ?

  • முதலில் விண்ணப்பதாரர் TNRTP திருப்பூரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட வேண்டும்.
  • பின்னர் TNRTP திருப்பூர் தொழில் அல்லது சமீபத்திய செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  • மாவட்ட வளவாளர் பணிக்கான விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும்.
  • இதையடுத்து, TNRTP திருப்பூர் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கவும்.
  • பின்னர், விண்ணப்ப படிவத்தை பிழை இல்லாமல் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, “மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், (தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்), மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரக 7-வது தளம், திருப்பூர் மாவட்டம். தொலைபேசி எண்: 0421-2999723” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • TNPSC Online Classes
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!