தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து – முதல்வரின் விளக்கம்!

0
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து - முதல்வரின் விளக்கம்!
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து - முதல்வரின் விளக்கம்!
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து – முதல்வரின் விளக்கம்!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்ததை பற்றி விரிவாக பார்ப்போம்.

தாலிக்கு தங்கம் திட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த அறிக்கை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தாக்கல் செய்தார். இதில் அரசின் நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதிஒதுக்கீடுகளும் இடம் பெற்றுள்ளது.

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Fixed Deposit வட்டியில் புதிய மாற்றம்!

இதனை தொடர்ந்து சட்ட மன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது ஒவ்வொரு துறை தொடர்பான கேள்விகள் பேரவையில் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கான தகுந்த பதில்களை துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் தற்போது வரை கூட்டுறவு துறை, மீன்வளத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு வகையான துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றுள்ளது.

ExamsDaily Mobile App Download

 

இதையடுத்து இன்று தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்யும் போது உயர்கல்வியில் சேரும் அரசு மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக பதிலளித்துள்ளார். அத்துடன் தாலிக்கு தங்கம் திட்டத்தின் படி திருமணமான பின் 5 ஆண்டுகளுக்கு பிறகே அவர்களுக்கு தங்கம் கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!