
குட் நியூஸ்.. மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை – இரண்டு நாள் இதே நிலவரம் தான் – உடனே வாங்க கிளம்புங்க!
ஆபரண தங்கத்தின் விலை இன்று (03.12.2022) சென்னையில் ரூ. 32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
குறைந்த தங்கம் விலை:
பொதுவாகவே தமிழக மக்களின் விருப்ப உலோகமாக தங்கம் இருக்கிறது. கடந்த மாதத்தில் குறைந்த தங்கம் விலை ஒரு சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் தான் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இது இல்லத்தரசிகள் மத்தியிலும் நகை வாங்க திட்டமிட்டவர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தங்கம் விலை நிலவரம் அனைவருக்கும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகை – சபாநாயகர் சொன்ன உறுதி தகவல்!
Exams Daily Mobile App Download
அதாவது இன்று தங்கம் சவரனுக்கு ரூ.32 குறைந்து 40,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் தங்கம் கிராம் ஒன்று ரூ. 5,106க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.600 சரிந்து ரூ71.600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் நாளை ஞாயிற்று கிழமையும் தங்கம் விலையில் அதிக மாறுதல்கள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.